Govt school Students

 


இனிப்பான செய்தி :

https://www.facebook.com/share/p/176QXdUjpq/

"ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார் " என்று குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா பாடியதைப் போல

அரசுப் பள்ளிக் குழந்தைகளின் தனித்திறமைகளை உணர்ந்த ஆசிரியர் பெருமக்கள், அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் மேன்மக்களாய் மாறுகிறார்கள்.

சிறுவர் இலக்கிய எழுத்தாளர் #கன்னிக்கோவில்இராஜா அவர்கள் பன்முகத் தன்மை வாய்ந்த ஆற்றல் பொருந்திய எழுத்தாளராக திகழ்ந்து வருகிறார். அவருடைய ஒரு முகம் தான் சிறுவர் எழுத்தாளர் என்னும் அரிய பெரிய முகம்.

சிறுவர் எழுத்தாளர் உலகில் முன்னணி எழுத்தாளராக கன்னிக்கோவில் இராஜா அவர்களும் திகழ்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
அவருடைய சிறுவர்களுக்கான கதைகள் கடல் கடந்தும் பல்வேறு உலகத் தமிழர்களிடையே பரவலாக வாசிப்பை பெற்று வருகிறது.

அவர் எழுதிய சிறார் கதையை #வந்தவாசி அரசுப் பள்ளி மாணவி ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார். இந்த நூலின் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நூலை #லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது

இந்நூலின் அட்டைப்படத்தை முகநூல் (facebook) வழியாக அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க வளர்க சிறுவர் இலக்கியம்.

அன்புடன் :

கவிஞர் கண்ணா. கார்த்திகேயன்
தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கழுப்பெரும்பாக்கம்
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
605111

வசிப்பிட முகவரி
இரும்பை கிராமம்
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்

Comments

Popular posts from this blog

Govt school Students

Govt school Students