Govt school Students

 

தமிழ் எழுத்துலகிலும்,சிறார் இலக்கியத்திலும் , நூல் வடிவமைப்பிலும் இராஜாவிற்கு இணை தோழர் கன்னிக் கோவில் இராசா அவர்கள் தான் ...

ஹைக்கூ வரலாற்றில் நீண்ட நெடிய பாரம்பரியத்திற்கு உரியவர்...அதே போல சிறார் இலக்கியத்தில் இவர் பெயரைத் தவிர்த்து விட்டு வரலாறு எழுத முடியாது.நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல்கள் படைத்தவர் ..

தான் எழுதினால் மட்டும் போதும் என்று எண்ணம் கொள்ளாதவர்..புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து உள்ளம் மகிழ்பவர்..விருதுகளுக்கு மயங்காதவர்.





அதுமட்டுமல்லாமல் குழந்தைகளைப் படைப்பாளர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் லாலிபாப் சிறுவர் உலகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அன்புக் குழந்தைகளின் மாமாவாக வலம் வருபவர்...

எங்கள் பள்ளிக் குழந்தைகள் எழுதிய #டமால்_டுமால்_பட்டாசு எனும் நூலுக்கு வாழ்த்துரை வழங்கி அழகாக வடிவமைப்பு செய்திருந்தார்.

இவரின் அடுத்த பாய்ச்சலாக அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு  சிறார் கதைகளை  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பை வழங்கி நெஞ்சம் மகிழ்கிறார்...

இந்த மகிழ்ச்சியில் நாங்களும் பங்குகொள்கிறோம். கமலிக்கு உதவிய தேவதை எனும் கதையை மொழிபெயர்ப்பு செய்த குழந்தை சனோபர் அவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்...

இந்த இனிய நாளில் நூலின்
அட்டைப் படத்தை முகநூலின் வழியே வெளியிடுவதில் அகம் மகிழ்கிறேன்...நனர்

செங்காந்தள் வீரராகவன்
தமிழாசிரியர்
அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி,மோகனூர்.
நாமக்கல் மாவட்டம்.

Comments

Popular posts from this blog

Govt school Students

Govt school Students