தமிழ் எழுத்துலகிலும்,சிறார் இலக்கியத்திலும் , நூல் வடிவமைப்பிலும் இராஜாவிற்கு இணை தோழர் கன்னிக் கோவில் இராசா அவர்கள் தான் ... ஹைக்கூ வரலாற்றில் நீண்ட நெடிய பாரம்பரியத்திற்கு உரியவர்...அதே போல சிறார் இலக்கியத்தில் இவர் பெயரைத் தவிர்த்து விட்டு வரலாறு எழுத முடியாது.நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல்கள் படைத்தவர் .. தான் எழுதினால் மட்டும் போதும் என்று எண்ணம் கொள்ளாதவர்..புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து உள்ளம் மகிழ்பவர்..விருதுகளுக்கு மயங்காதவர் . அதுமட்டுமல்லாமல் குழந்தைகளைப் படைப்பாளர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் லாலிபாப் சிறுவர் உலகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அன்புக் குழந்தைகளின் மாமாவாக வலம் வருபவர்... எங்கள் பள்ளிக் குழந்தைகள் எழுதிய #டமால்_டுமால்_பட்டாசு எனும் நூலுக்கு வாழ்த்துரை வழங்கி அழகாக வடிவமைப்பு செய்திருந்தார். இவரின் அடுத்த பாய்ச்சலாக அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு சிறார் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பை வழங்கி நெஞ்சம் மகிழ்கிறார்... இந்த மகிழ்ச்சியில் நாங்களும் பங்குகொள்கிறோம் . கமலிக்கு உதவிய தேவதை எனும் கதையை மொழிபெயர்ப்பு செய்த க...
லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகமாக தொடங்கி ஐந்தாண்டுகள் நிறைவுற்றது. இதுவரை பல படைப்பாளர்களின் சிறார் கதைகள், சிறார் பாடல்கள், சிறார் கதை பாடல்கள், சிறார் நாவல்கள், சிறார் கட்டுரைகள் எனப் பதிப்பித்து வெளியிட்டு இருக்கிறோம். இதோ. 2026 ஜனவரி முதல் வாரத்தில் 1) பாவலர் கல்லை மலரடியான் அவர்களின் #நீதிபதி_ஆமை 2) எழுத்தாளர் வாண்டு மாமி அவர்களின் #பொட்டியத்துக்_குருவிகள் 3) எழுத்தாளர் பிச்சிப் பூ அவர்களின் #பூனையை_பயமுறுத்திய_குட்டி_டைனோசர் 4) எழுத்தாளர் சிரா.செல்வகுமார் அவர்களின் #குயில்_பொரித்த_குஞ்சுகள் எனப் புத்தாண்டு பரிசாக நான்கு சிறார் நூல்கள் வெளிவருகின்றன. இவை அனைத்தும் சென்னை புத்தகக் காட்சியில் நூலேணி பதிப்பகம் அரங்கு எண். 181இல் கிடைக்கும்.
லாலிபாப்பின் புதிய_சிறார்_கதை_நூல் லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்த புதிய சிறார் கதைகள் நூல் கர்நாடக மாநிலம் உடுப்பியில் வசிப்பவர் திருமதி துளசி பட் அவர்கள். தமிழ் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர். தமிழில் முதல் முயற்சியாக குழந்தைகளுக்கான கதைகளை எழுதியுள்ளார். இந்தச் சட்டைப்_போட்ட_யானைக்குட்டி நூலில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன. கதை திருத்தம்: எழுத்தாளர் உமையவன் அவர்கள் நூல் வடிவமைப்பு & அச்சாக்கம்: கவிஞர் கன்னிக்கோவில் இராஜா கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு.# முத்துமணி நன்னன் , நம் உரத்த சிந்தனை இதழின் ஆசிரியர் திரு.உதயம் ராம் ஆகியோர் வாழ்த்துரை ரோடு வெளிவந்துள்ளது. நூல்: சட்டைப் போட்ட யானைக்குட்டி வகை: சிறார் கதைகள் நூலாசிரியர்: துளசி பட் பதிப்பகம்: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை. பேசி: 9841236965 விலை: ₹110/-
Comments
Post a Comment