Posts

லாலிபாப் புக்ஸ்

Image
 லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகமாக தொடங்கி ஐந்தாண்டுகள் நிறைவுற்றது. இதுவரை பல படைப்பாளர்களின் சிறார் கதைகள், சிறார் பாடல்கள், சிறார் கதை பாடல்கள், சிறார் நாவல்கள், சிறார் கட்டுரைகள் எனப் பதிப்பித்து வெளியிட்டு இருக்கிறோம். இதோ.‌ 2026 ஜனவரி முதல் வாரத்தில்  1) பாவலர் கல்லை மலரடியான் அவர்களின் #நீதிபதி_ஆமை 2) எழுத்தாளர் வாண்டு மாமி அவர்களின் #பொட்டியத்துக்_குருவிகள் 3) எழுத்தாளர் பிச்சிப் பூ அவர்களின் #பூனையை_பயமுறுத்திய_குட்டி_டைனோசர் 4) எழுத்தாளர் சிரா‌.செல்வகுமார் அவர்களின் #குயில்_பொரித்த_குஞ்சுகள் எனப் புத்தாண்டு பரிசாக நான்கு சிறார் நூல்கள் வெளிவருகின்றன. இவை அனைத்தும் சென்னை புத்தகக் காட்சியில் நூலேணி பதிப்பகம் அரங்கு எண். 181இல் கிடைக்கும்.

Kannikovil Raja's books release

Image
 சீர்காழி. செப்டம்பர் 5 நிவேதிதா பதிப்பகம் சார்பில் சிறார் எழுத்தாளர்களின் 22 நூல்கள் வெளியீட்டு விழா சீர்காழி விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. அந்த விழாவில் சிறர் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய "தியாவின் நட்சத்திர பூ", "மாய விளக்கு பூதம்", "பூட்டுப்போட்ட மீன்தொட்டி" ஆகிய மூன்று நூல்கள் சான்றோர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டன. விழாவில் ல் மாணவர்களுக்கென சிறப்பு புத்தகக் காட்சி நடைபெற்றது. நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

Kids rhymes

Image
 #புதியநூல்அறிமுகம்  இலக்கிய உலகில் தொடர்ந்து  கதை  கவிதை கட்டுரை நாடகம் நாவல் சிறார் இலக்கியம் வானொலி நாடகம்  என் இயங்கி வரும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாவலர் கல்லை_மலரடியான்   Kandaswamy Subramanian அவர்களின்  புதிய சிறுவர் பாடல் நூல் லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடு நூறுக்கும் மேற்பட்ட  படைப்புகளைத் தந்து ஊடக வெளிச்சம் பரவாத  பாசாங்கற்ற மனிதரின் படைப்பு பாரெங்கும் பரவ சிறு முயற்சி. நூலுக்கு  அணிந்துரை:  கவிஞர் #கோவி__ஆறுமுகம் வாழ்த்துரை: முனைவர் Pallavi Kumar

Govt school Students

Image
  தமிழ் எழுத்துலகிலும்,சிறார் இலக்கியத்திலும் , நூல் வடிவமைப்பிலும் இராஜாவிற்கு இணை தோழர் கன்னிக் கோவில் இராசா அவர்கள் தான் ... ஹைக்கூ வரலாற்றில் நீண்ட நெடிய பாரம்பரியத்திற்கு உரியவர்...அதே போல சிறார் இலக்கியத்தில் இவர் பெயரைத் தவிர்த்து விட்டு வரலாறு எழுத முடியாது.நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல்கள் படைத்தவர் .. தான் எழுதினால் மட்டும் போதும் என்று எண்ணம் கொள்ளாதவர்..புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து உள்ளம் மகிழ்பவர்..விருதுகளுக்கு மயங்காதவர் . அதுமட்டுமல்லாமல் குழந்தைகளைப் படைப்பாளர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் லாலிபாப் சிறுவர் உலகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அன்புக் குழந்தைகளின் மாமாவாக வலம் வருபவர்... எங்கள் பள்ளிக் குழந்தைகள் எழுதிய #டமால்_டுமால்_பட்டாசு எனும் நூலுக்கு வாழ்த்துரை வழங்கி அழகாக வடிவமைப்பு செய்திருந்தார். இவரின் அடுத்த பாய்ச்சலாக அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு  சிறார் கதைகளை  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பை வழங்கி நெஞ்சம் மகிழ்கிறார்... இந்த மகிழ்ச்சியில் நாங்களும் பங்குகொள்கிறோம் . கமலிக்கு உதவிய தேவதை எனும் கதையை மொழிபெயர்ப்பு செய்த க...

Govt school Students

Image
  இனிப்பான செய்தி : https://www.facebook.com/share/p/176QXdUjpq/ "ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார் " என்று குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா பாடியதைப் போல அரசுப் பள்ளிக் குழந்தைகளின் தனித்திறமைகளை உணர்ந்த ஆசிரியர் பெருமக்கள், அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறார்கள் . அதன் அடிப்படையில் அவர்கள் மேன்மக்களாய் மாறுகிறார்கள் . சிறுவர் இலக்கிய எழுத்தாளர் # கன்னிக்கோவில்இராஜா அவர்கள் பன்முகத் தன்மை வாய்ந்த ஆற்றல் பொருந்திய எழுத்தாளராக திகழ்ந்து வருகிறார். அவருடைய ஒரு முகம் தான் சிறுவர் எழுத்தாளர் என்னும் அரிய பெரிய முகம். சிறுவர் எழுத்தாளர் உலகில் முன்னணி எழுத்தாளராக கன்னிக்கோவில் இராஜா அவர்களும் திகழ்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அவருடைய சிறுவர்களுக்கான கதைகள் கடல் கடந்தும் பல்வேறு உலகத் தமிழர்களிடையே பரவலாக வாசிப்பை பெற்று வருகிறது. அவர் எழுதிய சிறார் கதையை #வந்தவாசி அரசுப் பள்ளி மாணவி ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார். இந்த நூலின் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நூலை #லாலிபாப் சிறுவர் ...

Govt school Students

Image
 இனிப்பான செய்தி : "ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார் " என்று குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா பாடியதைப் போல அரசுப் பள்ளிக் குழந்தைகளின் தனித்திறமைகளை உணர்ந்த ஆசிரியர் பெருமக்கள், அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் மேன்மக்களாய் மாறுகிறார்கள். சிறுவர் இலக்கிய எழுத்தாளர் #கன்னிக்கோவில்இராஜா அவர்கள் பன்முகத் தன்மை வாய்ந்த ஆற்றல் பொருந்திய எழுத்தாளராக திகழ்ந்து வருகிறார். அவருடைய ஒரு முகம் தான் சிறுவர் எழுத்தாளர் என்னும் அரிய பெரிய முகம். சிறுவர் எழுத்தாளர் உலகில் முன்னணி எழுத்தாளராக கன்னிக்கோவில் இராஜா அவர்களும் திகழ்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.  அவருடைய சிறுவர்களுக்கான கதைகள் கடல் கடந்தும் பல்வேறு உலகத் தமிழர்களிடையே பரவலாக வாசிப்பை பெற்று வருகிறது.  அவர் எழுதிய சிறார் கதையை #வந்தவாசி அரசுப் பள்ளி மாணவி ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார். இந்த நூலின் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.  இந்த நூலை #லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது இந்நூலின் அட்டைப்படத்தை மு...

New children's story book

Image
லாலிபாப்பின் புதிய_சிறார்_கதை_நூல் லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்த புதிய சிறார் கதைகள் நூல்  கர்நாடக மாநிலம் உடுப்பியில் வசிப்பவர் திருமதி துளசி பட் அவர்கள். தமிழ் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்.  தமிழில் முதல் முயற்சியாக குழந்தைகளுக்கான கதைகளை எழுதியுள்ளார்.  இந்தச் சட்டைப்_போட்ட_யானைக்குட்டி நூலில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன.  கதை திருத்தம்:  எழுத்தாளர் உமையவன் அவர்கள்  நூல் வடிவமைப்பு & அச்சாக்கம்: கவிஞர் கன்னிக்கோவில் இராஜா   கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு.# முத்துமணி நன்னன் ,   நம் உரத்த சிந்தனை இதழின் ஆசிரியர் திரு.உதயம் ராம் ஆகியோர் வாழ்த்துரை ரோடு வெளிவந்துள்ளது. நூல்: சட்டைப் போட்ட யானைக்குட்டி  வகை: சிறார் கதைகள்  நூலாசிரியர்: துளசி பட் பதிப்பகம்: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை.  பேசி: 9841236965 விலை: ₹110/-